2025 மே 22, வியாழக்கிழமை

கொண்டைமடுவில் மரக்குற்றிகள் மீட்பு

Editorial   / 2019 ஜூன் 28 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு கொண்டைமடு காட்டுப்பகுதியில் இருந்து பெறுமதியான மரக்குற்றிகள் விமானப்படையினரால் நேற்று பிற்பகல் மீட்க்கப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாதோரால் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட குறித்த மரக்குற்றிகளே இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளது.

மரக்குற்றிகளை விமானப்படையினர் முள்ளியவளை வன வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்

நாட்டில் தற்போது காணப்படும் அதிக வெப்பம் மற்றும் மழை வீழ்ச்சி இன்மையால் வறட்சியான நிலை காணப்படும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இவ்வாறு கட்டுப்பாடின்றி காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றமையானது எதிர்காலத்திற்கே ஆபத்தான ஒன்றாகும் என்று மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X