2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

கொரோனா இடர்கால கட்டக் கொடுப்பனவு

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 06 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

புத்தளம் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தற்காலிகமாக வசித்து வரும், வன்னி மாவட்ட முஸ்லிம்களுக்கு கொரோனா இடர்கால முதற் கட்டக் கொடுப்பனவு நேற்று வியாழக்கிழமை (05) வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையில் முதற்தடவையாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தின் போது நாடு முழுதும் முடக்கப்பட்ட போது அரசாங்கத்தினால் சகல மக்களுக்கும் 10 ஆயிரம் ரூபா இடர்கால கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், வன்னி மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் முந்தல், கற்பிட்டி, புத்தளம் மற்றும் வன்னாதவில்லு ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பல பகுதிகளில் வசித்து வரும் குடும்பங்களுக்கு குறித்த இடர்கால கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை.

இதனையடுத்து, குறித்த இடர்கால கொடுப்பனவை புத்தளத்தில் வாழும் வன்னி மாவட்ட மக்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்  ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவந்த 

நிலையில் 1241 குடும்பங்களுக்கான இடர்கால கொடுப்பனவு 10ஆயிரம் ரூபா நேற்று வியாழக்கிழமை மதுரங்குளி ஹிதாயத் நகர் மற்றும் உளுக்காப்பள்ளம் ஆகிய பகுதிகளில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .