Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட வயோதிபப் பெண்ணின் சடலத்தை மீண்டும் பொதுசுகாதார அதிகாரிகளால் மீளப்பெற்ற சம்பவம் ஒன்று, புதுக்குடியிருப்பு - வள்ளுவர்புரம் பகுதியில், இன்று (30) இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு - வள்ளுவர்புரம் பகுதியில், கடந்த 21ஆம் திகதி, 77 வயதான வயோதிபப் பெண் ஒருவர் வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, அவரது சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அதிலிருந்து பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டு, 28ஆம் திகதி, பரிசோதனைக்காக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதன் முடிவு, வருவதற்கு முன்னரே, நேற்று முன்தினம் (29) வயோதிபப் பெண்ணின் சடலம் உறவினர்களிடம் வைத்தியசாலை நிர்வாகத்தால் கையளிக்கப்பட்டது. எனினும், நேற்று (29) மாலை 5 மணிக்கு, கிடைக்கப்பெற்ற முடிவுகளில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
இந்நிலையில், வள்ளுவர்புரம் பகுதியில் உயிரிழந்த வயோதிபப் பெண்ணின் இறுதியை கிரியைகள் இன்று (30) காலை இடத்பெற்றது. இதன்போது, பலர் இந்த இறுதிகிரியை நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
வைத்தியசாலை நிர்வாகத்தால் குறித்த பெண் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக அறிக்கை கொடுக்கப்பட்டு உடலம் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக, உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இன்றுக் காலை , சடலத்தைப் பொறுப்பேற்று, வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல, பொதுசுகாதார பரிசோதகர்கள், அங்கு சென்ற போது உயிரிழந்தவரின் உறவினர்கள் தகுந்த ஆதாரத்தை கோரி, பொதுசுகாதார பரிசோதகர்களுடன் முரண்பட்டதுடன், நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டுக்கு எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.
இதன்போது, அங்கு பதற்றம் நிலவியதால், அப்பகுதிக்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு பொலிஸார், புதுக்குடியிருப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி கெங்கதீஸ்வரன் ஆகியோர் உறவினர்களிடம் உண்மை நிலையை எடுத்துரைத்தனர்.
அத்துடன், வைத்தியசாலை நிர்வாகத்தில் தவறு ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தி, சடலத்தை மின்சார தகன சுடலையில் எரியூட்டுவதற்காக, வவுனியா மாவட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளதுடன், அச்சத்தையும் தோற்றிவித்துள்ளது.
அத்துடன், மரண வீட்டுக்கு பலர் சென்று வந்த நிலையில், அவர்களை இனங்கண்டு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .