2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கொரோனா நீங்க வேண்டி விசேட வழிபாடு

Editorial   / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டிலிருந்து முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவரும் சுகம் பெற வேண்டியும், மன்னார் மாவட்டப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில், நேற்று (05) இரவு 8.30 மணியளவில் விசேட பூஜை, வழிபாடுகள் நடைபெற்றன.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இதில் மன்னார், அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 12 பௌத்த பிக்குகள் கலந்துகொண்டனர். இந்த விசேட வழிபாடு இன்று காலை வரை நடை பெற்றது

இதில், மன்னார் மாவட்ட மேலதிக செயலாளர் எஸ்.குணபாலன், அதிபர் மற்றும் மன்னார் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .