Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 18 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற தொடர் கொள்ளைச் சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் இருவரை, முல்லைத்தீவு பொலிஸார், நேற்று (17) இரவு கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கிளில் ஒருவர், திருகோணமலையைச் சேர்ந்தவரென, விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 12ஆம் திகதியன்று, ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையிலேயே, குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், கடந்த வாரம், உண்ணாப்புலவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தொண்ணூறாயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு பணம், பொருள்கள் ஆகியவற்றை கொள்ளையிடப்பட்டமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago