2025 மே 16, வெள்ளிக்கிழமை

கொழும்பு இளைஞன் வவுனியாவில் சடலமாக மீட்பு

Editorial   / 2020 ஜூன் 03 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா – காத்தார்சின்னகுளம், நாலாம் ஒழுங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து, இன்று (03) 30 வயது இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து, நேற்றுக் காலை துர்நாற்றம் வீசியதையடுத்து, அது தொடர்பில், அயலவர்கள் வவுனியா பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், வீட்டின் ஜன்னல் வழியாகப் பார்த்த போது, தூக்கில் தொங்கிய நிலையில், இளைஞன் ஒருவர் சடலமாக இருப்பதை அவதானித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞன், கொழும்புப் பகுதியை சேர்ந்தவர் என்றும் இந்த வீட்டில் வாடகைக்கு வசித்து வருவதாகவும், கிராம மக்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .