2025 மே 22, வியாழக்கிழமை

’கோடாலிக்கல் குளம் புனரமைக்கப்படவுள்ளது’

Editorial   / 2019 ஜூன் 28 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்த கோடாலிக்கல் குளம் 8.3 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளதாக, மாவட்ட கமநல அபவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக உடைபெடுத்த  கோடாரிக்கல் குளத்தைப் புனரமைத்துத்தருமாறு, அதன் கீழான விவசாயிகள் கோரிக்கைவிடுத்திருந்ததுடன், ஆரம்பத்தில் அதற்கான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்ட போது, இக்குளம் புனரமைக்கப்படாது போனால், அடுத்த காலபோகச்செய்கையை மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்படும்

திங்கட்டகிழமை (24), முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் விவசாயிகளால், இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

கோடாலிக்கல் குளமானது, 8.3 மில்லியன் ரூபாய் நிதி தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், இவ்வருடத்தில், இக்குளம் புனரமைப்படவுள்ளதாகவும், கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X