2025 மே 21, புதன்கிழமை

‘கோட்டாவை தமிழர்கள் ஆதரிக்கார்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை, தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்களென, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்தார்.

முல்லைத்தீவு - பாண்டியன்குளம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், “யுத்தத்தின் போதும் யுத்தத்தின் பின்னரும், மக்களுடன் இணைந்து வாழ்பவள் எனும் முறையில் கூறுகின்றேன், கோட்டாய ராஜபக்‌ஷவை, தமிழ் மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்றார்.

மஹிந்த ஆட்சியை அசுர ஆட்சி என்றே தாங்கள் பார்ப்பதாகத் தெரிவித்த அவர், வெள்ளை வான் கடத்தல், பிள்ளைகளைக் கடத்தல், காணாமல் ஆக்கப்படுதல் என்பன, மஹிந்தவின் ஆட்சியில்தான் அரங்கேறியதாவும் எனவே, மஹிந்த யாரை நியமித்தாலும், தமிழ் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையெனவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .