2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

கோணாவில் பாடசாலை மாணவனின் பாதுகாப்பு கருதி பொலிஸ் ரோந்து

Editorial   / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்  

கோணாவில் பாடசாலை மாணவனின் பாதுகாப்பு கருதி குறித்த பாடசாலை ஆரம்பிக்கும் போதும்  நிறைவுறும் போதும் குறித்த பகுதிகளில் பொலிஸ் ரோந்து மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி பொலீஸ் மா அதிபர் மஹிந்த குணரட்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பணிக்கமைய பாடசாலைகளில் கடைப்பிடிக்கப்பட்ட தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா விற்பனை பற்றி பொலிஸாருக்கு தகவல் வழங்கிய மாணவன் அச்சுறுத்தப்பட்ட பின்னர் தாக்கப்பட்ட பல்வேறு மட்டங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் நேற்று (06) வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்  சி.தவராசாவின் ஏற்பாட்டில் குறித்த மாணவனின்  தந்தை வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து தனது மகனின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

இதனையடுத்த வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரட்னவை தொடர்புகொண்டு கலந்துரையாடியதோடு,  மாணவனின் தந்தையை பிரதி பொலிஸ் மா அதிபரை சந்திப்பதுக்கு அனுப்பியிருந்தார்.

இதனையடுத்து மாணவனின் தந்தையுடன் உரிய பொலிஸ் அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி பொலிஸ் மா அதிபர் மஹிந்த குணரட்ன, மாணவன் தாக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்த அவர், பாடசாலை அதிபருடன் மாணவனின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாட இருப்பதாகவும், சில வாரங்களுக்கு கோணாவில் பாடசாலை ஆரம்பிக்கும் போதும் முடிவுறும் போதும் பொலிஸ் சுற்றுக்காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தோடு, மாணவனின் பெற்றோர் எவ்வேளையும் தங்களோடு தொடர்பு கொள்வதுக்குரிய ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .