Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு, துணுக்காய், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் பஸ் சேவைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வருவதாக, பொது மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.
துணுக்காயில் இருந்து ஆரோக்கியபுரம், அமதிபுரத்துக்கான பஸ் சேவை, துணுக்காயில் இருந்து ஐயன்கன்குளம், புத்துவெட்டுவான் வழியான கொக்காவில் வரையான பஸ் சேவை கடந்த ஏழு ஆண்டுகளாக இடம்பெறுவதில்லை.
இதேபோன்று, மாந்தை கிழக்குக்கான கூடுதலான பஸ் சேவைகள், கிராமங்களை நோக்கி இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இதன் காரணமாக, வைத்தியசாலைகளுக்கும் பாடசாலைகளுக்கும் பிரதேச செயலகங்களுக்கும் மாவட்டச் செயலகத்துக்கும் செல்லும் மாணவர்களும் பொது மக்களும் கடந்த பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
கூட்டங்களில் கிராமங்களுக்கு பஸ்கள் வரும் என உறுதிமொழிகள் வழங்கும் அரசியல்வாதிகள், சொகுசு வாகனங்களில் தாங்கள் பயணித்துக் கொண்டு, பாதிக்கப்படும் மக்களை கவனத்தில் கொள்வதில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago