2025 மே 05, திங்கட்கிழமை

கோவிந்தன் கடை சந்தியில் ஆணின் சடலம் மீட்பு

Niroshini   / 2021 மே 25 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

 

கிளிநொச்சி - கோவிந்தன் கடைச் சந்தி, இரணைமடு நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து, இன்று (25) காலை, ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – திருவையாறு, வில்சன் வீதியைச் சேர்ந்த கே.ரமேஸ்குமார் (வயது 30) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர், தனியார் வீதி அபிவிருத்தி நிறுவனம் ஒன்றில் வீதி புனரமைப்பு பணியில் ஈடுப்பட்டவர் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இவர், நேற்று  (24) மாலை, குளிப்பதற்காக வாய்க்காலில் இறங்கிய போது, நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X