2025 மே 05, திங்கட்கிழமை

கோவில் காணியில் விமானக் குண்டு மீட்பு

Princiya Dixci   / 2021 மே 28 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி, உருத்திரபுரம், சிவநகர் பகுதியில் கோவில் காணியொன்றில் இருந்து யுத்த காலத்தில் வீசப்பட்ட விமானக் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி காணி கனரக வாகனத்தின் மூலம்  துப்புரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, துப்புரவு பணிகளில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தவர்களால் இந்தக் குண்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.

உடனடியாக பொலிஸாருக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் அறிவிக்கப்பட்டதையடுத்து, அவர்களால் குண்டு மீட்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X