2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

சிறி சபாரத்தினத்தின் நினைவஞ்சலி நிகழ்வு

George   / 2017 மே 07 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன், எஸ்.நிதர்ஷன்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினத்தின் 31ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும்  தமிழ் தேசிய ஒற்றுமை வாரமும்  சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில்  வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

ரெலோ இயக்கத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்ற  அஞ்சலிக் கூட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் , வடமாகாணசபை பேரவை தலைவர் சி.வி.கே.சிவஞானம்,  ரெலோ இயக்க செயலாளர் நாயகம் என். சிறிகாந்தா ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அத்துடன், வட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், செ.மயூரன், இ.இந்திராசா, ம.தியாகராசா, சிவநேசன், புவனேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கருணாகரன் (ஜெனா), தெற்கு பிரதேச சபை செயலாளர் கிஷோர் சுகந்தி,  கட்சிப் பிரதிநிதிகளும் மலர் மாலை அணிவித்து  அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

கொலை செய்யப்பட்ட சிறி சபாரத்தினம், இயக்க போராளிகள், கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவு நாளை ரெலோ அமைப்பினர் வருடந்தோறும் மே மாதம் 6ஆம் திகதி அனுஷ்டித்து வருகின்றனர். ஏப்ரல் 29ஆம் திகதியிலிருந்து மே மாதம் 6ஆம் திகதி வரை, தமிழ்த் தேசிய ஒற்றுமை வாரமாக நினைவு கூர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .