2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

சிறாட்டிக்குளத்தில் மரக்கடத்தல்

Thipaan   / 2016 நவம்பர் 05 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, மாந்தை கிழக்குப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சிறாட்டிகுளம் பகுதியில் தொடர்ச்சியாக காட்டுமரங்கள்; அழிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இப்பகுதியை அண்;மித்த காட்;டுப்பகுதி மற்றும் மூப்பன்குளம் ஆகிய பகுதிகளில் மிகவும் பெறுமதி வாய்ந்த பாலை, முதிரை போன்ற காட்டுமரங்கள் வெட்டப்;பட்டு கனரக வாகனங்களின் உதவியுடன் வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.

அத்துடன், இப்பகுதிக்கான பிரதான வீதியாகக் காணப்படும் நட்டாங்கண்டல், சிறாட்டிகுளம் பிரதான வீதி மீள்குடியேற்றத்தின் பின்னர் புனரமைக்கப்பட்;ட போதும் இவ்வாறு மரக்கடத்;தல்;களால் வீதி மிகவும் மோசமாக சேதமடைந்து, சாதாரண துவிச்சக்கர வண்டியில் கூட பயணிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது.

இக்கிராமத்தில் உள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் எவையும் இதுவரை தீர்க்கப்படாத நிலையில், இந்தப் பகுதியில் உள்;ள வளங்கள் அழிக்;கப்பட்டு வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

சில அதிகாரிகளின் துணையுடன் இவ்வாறான வளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன எனவும் இதனைக் கட்டுப்படுத்த உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .