Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2016 நவம்பர் 14 , மு.ப. 08:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் 14 வயதிற்கும் மேற்பட்ட சிறுவர்கள், பாடசாலைகளுக்குச் செல்லாது சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக கிராம மட்ட அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
கிளிநொச்சி கல்லாறு கிராமத்தில் தற்போது சட்;டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன என்றும் இதனை கட்டுப்படுத்த உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ள இப்பகுதி பொது அமைப்;புக்;கள், தற்போது தமது கிராமத்தில் 17 வயதுக்கும் குறைந்த 14 வயது வரையான சிறுவர்கள், பாடாலைகளுக்கு செல்லாது சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகளுடன் தொடர்புபட்ட நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளன.
எனவே, இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்பினர் நடவடிக்;கை எடுத்து சிறுவர்களின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்தவேண்டும் எனவும் கிராமமட்ட பொது அமைப்;புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதேவேளை, இப்பகுதியில் வசித்து வரும் 17 வயதுடைய ஒருவன் 25 போத்தல் கசிப்புடன் கைதுசெய்யப்பட்டும் மற்றுமொரு சிறுவன் கசிப்பு வைத்திருந்தமை தொடர்பிலும் கைது செய்;யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக அச்சுவேலியில் அமைந்துள்ள சான்றுபெற்ற பாடசாலையில் வைத்து பராமரிக்கப்;படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
9 hours ago