Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
George / 2016 ஒக்டோபர் 27 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கி.பகவான்
சாவகச்சேரி பகுதியில் நடைபாதை வியாபாரிகள், தீபாவளி வியாபாரத்தில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி நகர சபை செயலாளர் ஆ.சண்முகதாஸன், நேற்றுப் புதன்கிழமை (26) அறிவித்துள்ளார்
சாவகச்சேரி பிரதேசத்தைச் சேர்ந்த வறிய மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளிட்ட சுமார் 15 தொடக்கம் 20 குடும்பங்களுக்கு, நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட, சாவகச்சேரி நகரசபை அனுமதி வழங்கியிருந்தது.
ஆனால், இந்த அனுமதியைப் பயன்படுத்தி, தென்னிலங்கையிலிருந்து சுமார் 50 நடைபாதை வியாபாரிகள், வாகனங்களில் செவ்வாய்க்கிழமை (25) இரவு சாவகச்சேரி பகுதிக்கு படையெடுத்துள்ளனர்.
இவ்வாறு அதிகளவான நடைபாதை வியாபாரிகள் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டால், தங்களின் தீபாவளி வியாபாரம் பாதிக்கப்படும் எனவும், அதிகளவு முதலுடன் ஆரம்பித்துள்ள தங்கள் தொழில் நடவடிக்கை, இவர்களால் பாதிக்கப்படும் எனக்கூறி, சாவகச்சேரி வர்த்தக சங்கத்தினர், சாவகச்சேரி நகர சபையின் முன்பாக நேற்று புதன்கிழமை (26) ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனையடுத்து, வர்த்தக சங்கத்தினருடன் உரையாடிய நகர சபை செயலாளர் ஆ.சண்முகதாஸன், நடைபாதை வியாபாரிகளுக்குத் தடை விதிப்பதாக அறிவித்தார். அதற்கிணங்க அனைத்து நடைபாதை வியாபாரிகளும் அங்கிருந்து அகற்றப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago