2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சக்கர நாற்காலிப் பயணம் நிறைவுபெற்றது

Editorial   / 2020 பெப்ரவரி 19 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பெப்ரவரி 2ஆம் திகதியன்று முற்பகல் 08.30 மணியளவில், யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இருந்து  ஆரம்பிக்கப்பட்ட சக்கர நாற்காலிப் பயணம், நேற்று (18) வவுனியாவை வந்தடைந்து நிறைவுபெற்றது.

இவ்வாறு பயணத்தை முடித்துகொண்டவர்களுக்கு, வாடி வீட்டில் வைத்து கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட ம.மொஹமட் அலி, ஜெகதீஸ்வரன், பிறேமசந்திர (தவிர்க்க முடியாத காரணத்தால் இடைவழியில் பயணத்தை முடித்துகொண்டவர்) ஆகியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகளை வலியுறுத்தி, சக்கர நாற்காலி மூலம் இலங்கை முழுதுமான  சுற்றுபயணத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .