Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 13 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தக சங்கத்தில் இருந்து, பொருளாளர் உட்பட நால்வர் விலகியுள்ளனர்.
குறித்த சங்கமானது, யாப்பு விதிமுறைகளுக்கு மாறாக இரண்டு வருடங்களை கடந்து செயற்பட்டு வருகின்றமை, வர்த்தகர்களின் நலன்களுக்கு மாறாக இடம்பெறுகின்ற செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கின்றமை, சந்தை விடயத்தில் பிரதேச சபையின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி செயற்படுகின்றமை உள்ளிட்ட காரணங்களை முன்வைத்தே, இவர்கள் பதவி விலகியுள்ளனர்.
இது தொடர்பில், சந்தை வர்த்தகச் சங்கத்தின் தலைவர் அ.யேசுராசாவிடம் தொடர்பு கொண்டு வினவிய போது, அதற்கு பதிலளித்த அவர், சந்தைக்கான நிரந்தரக் கட்டடம் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக இரண்டு வருடங்களைக் கடந்தும் புதிய நிர்வாகத் தெரிவுக்கு செல்லவில்லையெனவும் ஆனால், புதிய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்கு தான் தயராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், நில வாடகை அதிகரித்தல் தொடர்பில் வர்த்தகர்களால் தனக்கு முறைப்பாடு எதுவும் வழங்கப்படவில்லையெனவும் கூறினார்.
இதேவேளை, இந்தப் பதவி விலகல் குறித்த கடிதங்கள், தனக்கு இதுவரை கிடைக்கவில்லையெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
38 minute ago
59 minute ago