2025 ஓகஸ்ட் 09, சனிக்கிழமை

சட்டவிரோத மீன்பிடி: தொகுதி வலைகள் மீட்பு

Kogilavani   / 2017 மே 16 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

ஊர்காவற்துறை, பருத்தியடைப்பு கடற்பரப்பில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (16) காலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, ஏழு தொகுதி தடைசெய்யப்பட்ட தங்கூசி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்றொழில் நீரியல்வளத்துறையின் மாவட்ட பணிப்பாளர் தெரிவித்தார்.

ஊர்காவற்துறை கடற்றொழில் பரிசோதகர் பிரிவினுள், ஒரு சில மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலையினைப் பாவித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக ஏனைய மீனவர்களினால் குற்றஞ்சாட்டப்பட்டது.

கடற்படையினரின் உதவியுடன் திடீர் தேடுதல் நடவடிக்கை ஒன்றினை உதவி பணிப்பாளர் மேற்கொண்டிருந்ந்த நிலையில், 7 தொகுதி வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வலைத்தொகுதி, உரிமை கோரப்படாததை அடுத்து ‘ஏ’ அறிக்கை மூலம் ஊர்காவற்துறை நீதிமன்றில் பாரப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதவிப் பணிப்பாளர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .