2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட நால்வர் கைது

Princiya Dixci   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்குளம், மல்லாவி மற்றும் முள்ளியவளை ஆகிய பகுதிகளில் அனுமதிப்பத்திரமின்றியும் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறியும் மணல் ஏற்றிய நான்கு உழவு இயந்திரங்கள் கடந்த 3 நாட்களில் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைப்பற்;றப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய இரண்டு உழவு இயந்திரங்கள் நட்டாங்கண்டல் மற்றும் கீச்சுக்குளம் ஆகிய பகுதிகளில் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி மணல் ஏற்றிய இரண்டு உழவு இயந்திரங்கள் என நான்கு உழவு இயந்திரங்களையும் அதன் சாரதிகளையும் முல்லைத்தீவு விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நான்கு பேரையும், குறித்த பொலிஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .