Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி பசுமைப் பூங்காவில், கரைச்சி பிரதேச சபையால் அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலம், எவ்வித சட்டத் திட்டங்களுக்கும் உட்படாது அமைக்கப்பட்டுள்ளதாக, தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த கணக்காய்வு அலுவலகம், 1989ஆம் ஆண்டின் வர்த்தமானி அத்தியாயம் viiஇன் 169-173 பிரிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைவான செலவு மதிப்பீட்டுகள் எதுவும் மேற்கொள்ளப்படாது இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளதெனச் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், பிரதேச சபைகள் பிரிவு பெறுகைகள் குழுவின் கீழ், ஆகக் குறைந்தது மூன்று கூறுவிலை கோரல் பெறப்பட்டிருக்க வேண்டுமெனவும் ஆனால் குறித்த தொங்கு பாலம் நிர்மாண விடயத்தில் நடைபெறவில்லையெனவும், அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், கரைச்சி பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், இநதத் தொங்கு பாலம் நிர்மாணப் பணிகள் உள்ளடக்கப்படவில்லையெனவும், அலுவலகம் கூறியுள்ளது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago