Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பவர்கள் அதற்கு முரணாக நடந்து கொள்கின்றார்கள் என, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்தார்.
வவுனியா - கனகராயன்குளத்தில், முன்னாள் போராளியொருவரது குடும்பமொன்றின் மீது, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, கனகராயன்குளம் பாடசாலைக்கு முன்னால், இன்று (11) காலை, கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்களை மிருக்கத்தனமாக தாக்கி இருக்கின்றார்கள். இன்று அந்த பிள்ளைகள், தாய், தந்தையர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
பாடசாலை சிறுமிக்கு வயிற்றில் எட்டி உதைக்கும் அளவுக்கு பொலிஸ் அதிகாரிக்கு அந்த உரிமையை யார் கொடுத்தது? சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்களே இன்று அதற்கு முரணான முறையில் நடந்து கொண்டிருப்பது மோசமான வேலையாக காணப்படுகின்றது.
இவ்வாறு கடமை நேரத்தில் சிவில் உடையில் சென்று அந்த பிள்ளைகளை தந்தையை,தாயை தாக்கிய செயலுக்கு எதிராக இந்த நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .