Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 27 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
நீராவியடிப் பிள்ளையார் முன்றலில் நடந்தேறிய நீதிக்குப் புறம்பான செயல், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியவர்கள் அதை மீறி இருக்கின்றமை தொடர்பில் பொதுநலவாய கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள அனைத்து பிரதிநிதிகளின் கவனத்துக்கும் கொண்டு வந்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், பொது நலவாய நாடுகளின் கூட்டத்தொடர் இந்த முறை உகண்டா நாட்டிலே நடைபெறுகிறது. இந்த பொதுநலவாய நாடுகளின் கூட்டத்தொடரில் சபாநாயகருக்கு பதிலாக நான் தலைமை தாங்கி வந்துள்ளதாகவும் கூறினார்.
பல்வேறு நாட்டு சபாநாயகர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருக்கிறார்களெனத் தெரிவித்த அவர், இக்கூட்டத் தொடரிலே அவர்களோடு தனிப்பட்ட ரீதியில் இலங்கையில் நடந்து கொண்டிருக்கின்ற இனப் பிரச்சினை சம்பந்தமாக விடயங்களையும் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த, நடைபெற்றுக் கொண்டிருக்கும் நீதித்துறையின் மீதான தவறான அடாவடி நடவடிக்கைகள் பற்றியும் நேரடியாக அவர்களுக்கு நிலைமையை எடுத்து விளக்கக் கூடிய அரிய சந்தர்ப்பமாக தான் இதை பயன்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளை பொதுநலவாய நாட்டு பிரதிநிதிகளிடம் நேரடியாக எடுத்துச் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், இதன்மூலம் தமது மக்களுடைய பிரச்சினைகள், இன்னும் முடிவுக்கு வராத பிரச்சினைகள் மற்றும் தற்போது நீராவியடிப் பிள்ளையார் முன்றலில் நடந்தேறிய நீதிக்குப் புறம்பான செயல், சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டியவர்கள் அதை மீறி இருக்கின்றமை என்பதை மிகத்தெளிவாக ஒவ்வொரு தலைவர்களிடமும் பிரதிநிதிகளிடம் தான் தனிப்பட்ட ரீதியில் எடுத்துக் கூறியுள்ளதாகவும் கூறினார்.
இன்னும், பலரிடம் அவர்களை சந்திக்கின்ற பொழுது இந்த விடயங்களை தான் எடுத்துக் கூறவுள்ளதாகத் தெரிவித்த அவர், இது ஒரு நல்ல சந்தர்ப்பமெனவும் கூறினார்.
தமிழ் மக்களுடைய பிரச்சினையை நேரடியாகவே தமிழ் மக்களுடைய பிரதிநிதி என்ற வகையிலே அதுவும் வன்னி மாவட்டத்தின் பிரதிநிதி என்ற வகையில் பங்குபற்றும் அனைத்து பிரதிநிதிகளிடமும் எடுத்துரைப்பேனெனவும், அவர் மேலும் கூறினார்.
12 minute ago
15 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
15 minute ago
20 minute ago