2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை 5 மீனவர்கள் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

 

முல்லைத்தீவு - சாலை கடற்பரப்பில், சட்டவிரோதக் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 5 கடற்றொழிலாளர்கள், இன்று (11) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் மூவர், வெலிஓயா பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் இருவர், புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்களென்றும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலை அடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் மற்றும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள், சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது, தடைசெய்யப்பட்ட சுருக்குவலை மற்றும் வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்டுவிட்டு கரை திரும்பிக்கொண்டிருந்த மூன்று படகுகளை, அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அத்துடன், அந்தப் படகுகளில் சென்று மீன்பிடி நடவடிக்கை ஈடுபட்ட கடற்றொழிலாளர்கள் ஐவரையும், அவ்வதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களை, மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக, கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் தெரிவித்தது.

இதேவேளை, சாலை - கரைவலை வாடிப் பகுதியில், கரைவலை அனுமதி இல்லாமல் கரைவலை வாடிகளை அமைத்தமை, இயந்திரங்களைப் பன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைதுசெய்ய முற்பட்ட வாடி உரிமையாளர் ஒருவர், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X