Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 04 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
ஒலிபெருக்கி சத்தத்தை குறைக்கக் கூறிய குடும்பத்தாரை மாங்குளம் பொலிஸார் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று, செல்வபுரம் முறிகண்டியில் நேற்று (03) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
செல்வபுரம் முறிகண்டியில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் வழிபாட்டுக்காக பொலிஸாரிடம் ஒலிபெருக்கி அனுமதி கோரியிருந்தனர். இதற்கான அனுமதியை பொலிஸார் வழங்கியதையடுத்து, குறித்த பகுதியில் அதிக ஒலி காணப்பட்டது.
ஒலிபெருக்கியின் சத்தத்தைக் குறைக்குமாறு, பொலிஸாரிடம் பிரதேச மக்கள் கோரியிருந்தனர். சம்பவ இடத்துக்கு கடமையில் இருந்த பொலிஸார் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதால், அது தொடர்பில் அவசர அழைப்பு பொலிஸாருக்கும், கிளிநொச்சி - முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,மாங்குளம் பொலிஸாரால் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாததுடன், எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago