2026 மே 01, வெள்ளிக்கிழமை

சந்திப்பு

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - மாங்குளம் மற்றும் மல்லாவி பொலிஸ் நிலையங்களில் உள்ள பகுதிகளில் கிராம சேவையாளர் பிரிவு ரீதியாக அமைக்கப்பட்டிருக்கின்ற சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கும் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று, நேற்று (23) துணுக்காய் வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மாங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ்  பொறுப்பதிகாரி மற்றும் மல்லாவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு, சிவில் பாதுகாப்புக் குழுவில் உள்ள மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

அத்துடன், கிராம ரீதியாக காணப்படும் பிரச்சினைகள் மற்றும் மது பாவனை ஒழிப்பு தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .