Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2017 ஜனவரி 07 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் வியாழக்கிழமை, பொது நினைவுச் சமாதி ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஐவரை நேற்று, தலா 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்த கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, வழக்கை எதிர்வரும் மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் வியாழக்கிழமை, பொது நினைவுச் சமாதி ஒன்றை அமைக்கும் பணியில் மாவீரா்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் ஈடுப்பட்டிருந்தனர்.
இதன்போது கரைச்சி பிரதேச சபை செயலாளர் க.கம்சநாதன், சம்பவ இடத்துக்குச் சென்று பொதுச் சமாதி அமைக்கும் நிறுத்துமாறு கோரியிருந்தார். ஆனால் ஏற்பாட்டாளர்கள் மறுத்துவிட, சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார், ஏற்பாட்டாள்களுடன் சமரசமாக பேசி வியாிக்கிழமை மாலை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வாக்குமூலங்களை பதிவு செய்தப் பின்னார் நேற்று வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றுக்கு சமூகமளிக்குமாறு கூறியிருந்தனர்..
அதனடிப்டையில் நேற்று காலை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜரான சந்தேகநபர்களுக்கு இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை, கனகபுரம் மாவீரா் துயிலுமில்லம் அமைந்துள்ள காணிக்குள் எவரும் உட்பிரவேசிக்காமல் இருப்பதற்கு நீதிமன்றத்திடம் தடை உத்தரவு ஒன்றை பெற்றுக்கொள்ள பொலிஸார் கோரியபோது, அதனை நீதவான் நிராகரித்துவிட்டார்.
23 minute ago
34 minute ago
38 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
34 minute ago
38 minute ago
43 minute ago