2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

Editorial   / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மணற்குளம் கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட சாகுல் ஹமீது மொஹம்மட் வாஜித், அகில இலங்கை சமாதான நீதவனாக, இன்று (10) காலை, மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் உயர் தர கல்வியை குருநாகல் மதீனா தேசிய பாடசாலையிலும், தற்போது இலங்கைக்கான தஞ்சாவூர் பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பையும் மேற்கொண்டார்.

அத்துடன், முசலி பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராகவும், அவர் கடமையாற்றி வருகின்றார்.

மேலும், மன்னார் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழில் சங்கத்தின் மாவட்ட தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X