2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சமாதானத்தை வலியுறுத்தி மன்னாரில் உண்ணாவிரதம் ஆரம்பம்

Editorial   / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில்  “சாக்கு சாமியார்” என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பு கிருஷ்ணன் டயஸ் என்கின்ற குருஜி என்பவரால், தொடர்சியாக 48 நாள்களுக்கு மௌன விரதம் மேற்கொள்ளவுள்ளதுடன், உண்ணாவிரதப் போராட்டமொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கையின் சுதந்திர தினமான நாளை (04), மன்னார் பிரதான பாலம், வங்காலை சரணாலய சுற்று வட்டார காரியாலயத்துக்கு அருகாமையில் ஓலைக் குடிசை அமைத்து, இந்த உண்ணாவிரதப் போராட்டத்தையும் மௌனவிரதத்தையும், குறித்த நபர் ஆரம்பிக்கவுள்ளார்.

நாட்டில் சமாதானம் ஏற்படவும் சாதி, மத, இன, மொழி பேதமின்றி மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டியுமே, இந்த உண்ணாவிரதப் போராட்டமும் மௌனவிரதமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ்வாறு முன்னெடுக்கப்படவுள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டமும் மௌனவிரதமும் மார்ச் 22ஆம் திகதியன்று, நண்பகல் 12 மணியுடன் நிறைவடையுமென, சாக்கு சாமியார் தெரிவித்தார்.

இவர், கடந்த வருட சுதந்திர தினத்தன்றும், நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி, மன்னார் - தள்ளாடி அந்தோனியார் தேவாலயத்தில் இருந்து அநுராதபுரம் ஸ்ரீமா போதி வரை, அங்கப் பிரதட்சை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .