Editorial / 2018 மார்ச் 18 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள 19 கிராம அலுவலர் பிரிவுகளில், 13 கிராம அலுவலர் பிரிவுகளில் சமுர்த்தியில் புறந்தள்ளப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கிராம அலுவலர் பிரிவுகளில், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன. இவர்களது வறுமையைப் போக்க இப்பகுதிகளில் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டிருக்கின்ற குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவுகளைக் கொடுக்க வேண்டும் என்பதை பல தடவைகள் வலியுறுத்தியிருக்கின்ற போதும், இதுவரை அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க இந்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதாவது, கரைதுரைப்பற்றுப் பிரதேசத்திலும் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும் 23 கிராம அலுவலர் பிரவுகளில் மிக வறுமைக்கோடடின் கீழ் வாழ்கின்ற 6,715 பேருக்காவது முதற்கட்டத்தில் இந்தக் கொடுப்பனவுகள் வழங்க வேண்டும் என்று, வடமாகாண சபை து.ரவிகரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .