Princiya Dixci / 2021 மார்ச் 31 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ. கீதாஞ்சன்
இறுதிப்போரின் போது, இராணுவத்திடம் சரணடைந்து, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை,்மே 17ஆம் திகதி வரைஒத்நிவைத்து, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம், நேற்று (30) உத்தரவிட்டது.
எழிலன் உள்ளிட்ட 12 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணைகள், கடந்த சில வருடங்களாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுவந்த நிலையில், எழிலன் உள்ளிட்ட ஐந்து பேர் தொடர்பான ஆட்க்கொணர்வு வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
மிகுதியாக உள்ள 7 பேரின் வழக்குகள், முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்த வழக்கு, நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது, வழக்கு தொடுனர்களும் அவர்கள் சார்பான சட்டத்தரணிகள் எவரும் வருகை தராத காரணத்தால், குறித்த வழக்கு மீதான விசாரணை, மே மாதம் 17 திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
9 hours ago
9 hours ago
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
14 Nov 2025
14 Nov 2025