2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

’சரியான நீர் முகாமைத்துவத்தை பின்பற்றவும்’

Editorial   / 2019 மே 24 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

வரட்சியை கருத்திற்கொண்டு, சரியான நீர் முகாமைத்துவத்தை பின்பற்றி பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதன் மூலமே எதிர்காலத்தில் வெற்றியடையமுயும் என்று, மாவட்ட விவசாயப் பணிப்பாளர் செல்வராஜா தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் சிறந்த விவசாயிகளை கௌரவிக்கின்ற நிகழ்வு கடந்த 21ஆம் திகதி, வட்டக்கச்சியில் அமைந்துள்ள விவசாயப்பண்ணையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர்,  மாவட்ட பணிப்பாளர் கிளிநொச்சி மாவட்டத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

இவர்களது பிரதான தொழிலாக விவசாயம் காணப்படுகின்றது. தற்போது நாளுக்கு நாள் வறட்சி அதிகரித்துச் செல்கின்றது.

இந்த வரட்சிக் காலத்தில் நீர் முகாமைத்துவம் என்பது மிக முக்கியமானது. நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் தான் நாங்கள் வெற்றியடைய முடியும்.

வீண் விரயமாகுதல் தேவைக்கு அதிகமாக நீரைப்பயன்படுத்துதல் என்பன தடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .