2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சர்வமத தலைவர்களுடன் சந்திப்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

வவுனியாவில் சர்வமத தலைவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலுமான சந்திப்பொன்று, மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில், இன்று நடைபெற்றது.

தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் கிராமிய அபிவிருத்திச் நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், வவுனியா மாவட்ட சர்வமத தலைவர்கள் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

சமாதானமான முறையில் சமகால மத, இன முரண்பாடுகளை களைவதும், எதிர்காலத்தில் அரசியல் தலைவர்களுடன் இணைந்து இன, மத நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் நடவடிக்கையாக இக்கலந்துரையாடல் அமைந்திருந்தது.

அத்துடன் சிறிய இன, மத முரண்பாடுகளை வளரவிடாது ஆரம்பத்திலேயே களைவது மற்றும் அரசியல்வாதிகள் மதம் சார்ந்த விடயங்களை கையிலெடுத்து அரசியல் செய்வதை தடுப்பது போன்ற விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டதுடன், தொடர்ந்து சர்வமத தலைவர்கள் மற்றும் அரசியல் தலைமைகள் சந்திப்புகளை மேற்கொண்டு இன, மத நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்கான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், கெ.திலீபன், காதர் மஸ்தான், மதத்தலைவர்கள், அரசசார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .