2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சாக்கு சாமியாரின் தவம் ஆரம்பமானது

Editorial   / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

 நாட்டில் சமாதானம் ஏற்பட வேண்டி, மன்னாரில் “சாக்கு சாமியார்” என அழைக்கப்படும் கிறிஸ்தோப்பு கிருஷ்ணன் டயஸ் குருஜி என்பவரால், தொடர்ச்சியாக 48 நாள்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ள மௌன விரமும் உண்ணாவிரதப் போராட்டமும், இன்று (04) ஆரம்பிக்கப்பட்டன.

மன்னார் பிரதான பாலம், வங்காலை சரணாலய சுற்று வட்டார காரியாலயத்துக்கு அருகாமையில் ஓலைக் குடிசை அமைத்து, இந்த உண்ணாவிரதப் போராட்டத்தையும் மௌனவிரதத்தையும், குறித்த நபர் ஆரம்பித்துள்ளார்.

இதன் ஆரம்ப நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார், திருக்கேதீஸ்வர கோவில் பிரதம குருக்கள் கண்ணண் குருக்கள், மூர்வீதி ஜீம்மா பள்ளி மௌலவி எஸ்.அசீம், மன்னார் மாவட்ட மேலதிகச் செயலாளர் எஸ்.குணபாலன், மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.செல்வக்குமரன் டிலான், பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .