2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சாதனையாளர் கௌரவிப்பு விழா

Editorial   / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா வடக்கு வலயப் பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர், ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு, நெடுங்கேணி மகா வித்தியாலத்தில் நேற்று (06) நடைபெற்றது.

வலயக் கல்விப் பணிப்பாளர் அன்னமலர் சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாக வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் அஞ்சலிதேவி சாந்தசீலன் கலந்துகொண்டார்.

இதன்போது, கடந்த 2018/2019ஆம் ஆண்டுகளில் வடக்கு வலயத்துக்குட்பட்ட பல பின்தங்கிய பகுதிகளில் உள்ள  பாடசாலைகளில் ஆரம்பகல்வி மாணவர்களின் கல்வி செயற்பாட்டில் சாதனைகளை நிலைநாட்டிய அதிபர், ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கவைக்கப்பட்டது.

நிகழ்வில் ஆரம்ப கல்வி பிரதிகல்வி பணிப்பாளர் அ.சற்குணராஜா, இலங்கை திருச்சபை பாடசாலை அதிபர் இ.நவரட்ணம், நெடுங்கேணி மகா வித்தியாலய அதிபர் செ.பவேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .