Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 பெப்ரவரி 10 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா மாவட்டத்தில், தேர்தல் கடமைக்காக வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களின் சாரதிகள், வாக்களிக்க முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளதாக, சாரதிகள் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்டத்தில், தேர்தல் பணிக்காக தனியார் வாகனங்கள் பல வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில். குறித்த வாகனங்களின் சாரதிகள் கடமையில் இருந்து செல்ல முடியாத நிலை காணப்படுவதனால், அவ்வாகனங்களின் சாரதிகள் வாக்களிக்க முடியாதுள்ளனர்.
தமது வாக்களிப்பு நிலையங்களில் இருந்து தூர பிரதேசங்களுக்கு வாகனங்களில் கடமைக்கு சென்றுள்ளமையால் வாக்களிக்கமுடியாத நிலை உள்ளதாகவும் அரச அதிகாரிகள் தம்மை வாக்களிக்க செல்ல அனுமதிக்க மறுத்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .