Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
மானிப்பாய் - சாவல்கட்டு பிரதேசத்துக்கு, சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு, சீல் செய்யப்பட்ட அரச சாராயத்தை விற்பனை செய்த பெண்ணை, நேற்று (05) கைது செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்தப் பெண், 1,500 ரூபாய்க்கு 750 மில்லிலீற்றர் கொள்ளவு உடைய சாராயத்தை விற்பனை செய்ய முற்பட்டதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர். நேற்று (05) போயா விடுமுறை தினம் என்பதால், மதுபானசாலைகள் அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன.
இதனை சாதகமாகப் பயன்படுத்தி, அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில்,மேற்படி பெண் வீட்டில் வைத்து, சாராயம் விற்பனை செய்துள்ளார். இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்தப் பெண்ணை கைதுசெய்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago