Niroshini / 2021 ஜூலை 27 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு - சாலை பகுதியில், இன்று (27) காலை, விறகு வெட்டிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், வெடிபொருள் வெடித்ததில் படுகாயமடைந்துள்ளார்.
கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பலவன்பொக்கணை கிராம அலுவலர் பிரிவை சேர்ந்த 35 வயதுடைய குடும்பஸ்தரே, இவ்வாறு காயமடைந்துள்ளார்.
குறித்த நபர், தனது மனைவி, மகனுடன், சாலை பகுதியில் அமைந்திருக்கும் நீரேரிக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது, நீரேரிக்கு அருகில், மனைவியும் மகனும் உப்பு அள்ளிக் கொண்டிருந்த நிலையில், குறித்த நபர் அருகில் உள்ள பற்றைக்காடுகளில் விறகு வெட்டிக்கொண்டிருந்தார்.
இதன்போது, மரத்தடியில் இருந்த வெடிபொருள் ஒன்று, கோடரி பட்டதில் வெடித்துள்ளது.
இதில் காயமடைந்த குடும்பஸ்தர், புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்
சம்பவம் அறிந்த முல்லைத்தீவு பொலிஸார் குறித்த இடத்துக்குச் சென்று, குறித்த பகுதியை பாதுகாப்பற்ற பகுதியாக அடையாளப்படுத்தி, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago