2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

‘சிமாட்’ வகுப்பறைகள் நிர்மாணம்

Editorial   / 2019 மார்ச் 14 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் 50 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ், வலிகாமம் வடக்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட 12 பாடசாலைகளில், “சிமாட்” வகுப்பறைகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒட்டகப்புலம் றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலை, வலித்தூண்டல் றோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலை, குட்டியப்புலம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, தையிட்டி கணேசா வித்தியாலயம், இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம், அளவெட்டி அருனோதயக் கல்லூரி, காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரி, வறுத்தலைவிளான் அமெரிக்க மிஷன் வித்தியாலயம், வீமன்காமம் மகா வித்தியாலயம், மல்லாகம் குழமங்கால் றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், கீரிமலை நகுலேஸ்வரா வித்தியாலயம், தெல்லிப்பழை தந்தை செல்வா தொடக்க நிலைப் பள்ளி ஆகிய பாடசாலைகளிலேயே, சிமாட் வகுப்பறைககள் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .