2025 மே 22, வியாழக்கிழமை

சிறுகைத்தொழிலாளர்களை சந்தித்த புத்திக்க

Editorial   / 2019 மே 31 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

கைத்தொழில் வணிய வாணிப பிரதி அமைச்சர் புத்திக பத்திரண, இன்று முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு, மாவட்டத்தில் உள்ள கைத்தொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்தக் கலந்துரையாடல், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கைத்தொழில் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் பிரதி அமைச்சர் இதன்போது கேட்டறிந்து கொண்டார். இதேவேளை அவர்களிற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் கோ.தனபாலசுந்தரம்,  கைத்தொழில் முயற்சி அதிகார சபையின் அதிகாரிகள் மாவட்ட செயலக தொழில்பயிற்சி அதிகாரிகள், என பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X