Editorial / 2023 ஒக்டோபர் 28 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் 14அகவை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் 25 ஆம் திகதியன்று இடம் பெற்றுள்ளது.
மருத்துவ அறிக்கையின் பிரகாரம் சிறுமியை இரு வேறு சந்தர்ப்பங்களில் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது
இந்த சம்பவம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முதல் சந்தேக நபரை கைது செய்து 27 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது தொடர்ந்து சிறுமியுடன் தகாத உறவினை மேற்கொண்ட குற்றத்துக்காக மற்றுமொருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டhர்
இவ்வாறு சிறுமையுடன் மூன்று பேர் வரை தகாத உறவில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சிறுமி தொடர்ந்து மாவட்டம் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
40 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
42 minute ago
1 hours ago