2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

சிறுவனைக் காணவில்லை என முறைப்பாடு

சண்முகம் தவசீலன்   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு சுதந்திரபுரம் மத்தி பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவனை காணவில்லை என உறவினர்களால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சத்தியசீலன் கிருஜன் என்ற குறித்த சிறுவன் கடந்த 22ஆம் திகதி உடையார்கட்டு பகுதியில் உள்ள கணணி கற்கை நிலையத்துக்கு  சென்று வந்து சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள சிறிய தந்தையில் வீட்டில் உணவருந்தியுள்ளார். பின்னர் 2 மணியளவில் வீடு செல்வதாக தெரிவித்து விட்டு சென்றவர் வீடு வந்து சேரவில்லை என சிறுவனின் தந்தை தெரிவித்தார்.

முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X