Niroshini / 2021 ஒக்டோபர் 05 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
அதிகமான சிறுவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என, வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜோசப் ஜெயகெனடி தெரிவித்தார்.
சிறுவர்களின் நிலை தொடர்பில் கருத்துத் தெரிவைக்கும் போதே, அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், அதிகமான சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார்கள் எனவும் இதனை மாற்ற சிறுவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியவர்களாக தாங்கள் இருப்பதாகவும் கூறினார்.
மேலும், சிறுவர் துஷ்பிரயோகம், வேலைக்கு அமர்த்துதல், இல்லங்களில் முடக்கி வைத்திருத்தல் போன்ற கோரமான செயல்களை இல்லாது செய்து, அவர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக தாங்கள் செயற்படுவோமாக இருந்தால், நிச்சயமாக குழந்தைகள் மகிழ்வார்கள் எனவும், அவர் கூறினார்.
"சமகாலத்தில் போதைப்பொருள் பாவனை, ஏனைய சிறுவர்களை வஞ்சித்தல் போன்ற பல்வேறு விடயங்களை செய்யும் நிலைக்கு சிறுவர்கள் தள்ளப்பட்டிருப்பது ஆரோக்கியமானதல்ல.
"அண்மையில், சிறைச்சாலைகள் தகவல்படி, அதிகமான சிறுவர்கள் சிறைச்சாலைகளில் இருக்கிறார்கள்” என்றார்.
13 minute ago
36 minute ago
41 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
36 minute ago
41 minute ago
51 minute ago