2025 மே 06, செவ்வாய்க்கிழமை

சிறையிலிருந்து தப்பி ஓடிய கைதி

Freelancer   / 2022 மார்ச் 18 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன் 

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் இன்று காலை தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டவர் எனும் சந்தேகத்தின் பேரில் வவுனியா கூமாங்குளத்தினை சேர்ந்த 20 வயது மதிக்கக்தக்க இளைஞர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் இன்று (18) காலை சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

தப்பிச் சென்ற கைதியைத் தேடி வவுனியா சிறைக்காவலர்கள்   பொலிசாருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X