Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 07 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
பிரித்தானியாவை தளமாக்கொண்டு இயங்கும் மிட்லான்ட் நுண்கலை மன்றத்தின் அனுசரணையுடன் சிவபுரம் பகுதியில் வசித்துவரும் 300 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருள்கள் வழங்கும் நிகழ்வு, நேற்று (06) நடைபெற்றது.
பரந்தன் மத்திய விளையாட்டுக் கழகத்தின் தலைவரது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர், பரந்தன் வர்த்தக சங்கத் தலைவர் ஐங்கரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களாக திரு.திருமதி ரவி இராஜேஸ்வரி குடும்பத்தினர் பங்களித்திருந்தனர்.
இத்தகைய நல்லுள்ளம் படைத்த மனிதர்களின் சேவையினால் யுத்த வடுக்களை சுமந்து இன்னல்படும் குடும்பங்கள் சற்று ஆறுதல் பெறுகின்றன. இவர்களைப் போன்றவர்களது சேவை மேலும் தொடரவேண்டும் எனவும் இன்று இந்த உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்த நிறுவனத்தினருக்கு தமது கண்ணீருடன் கூடிய நன்றியறிதலை தெரிவித்துக்கொள்வதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்தோர் தெரிவித்தனர்.
சிவபுரம் கிராமத்தில் வெள்ள அனர்தங்களாலும், வறுமை நிலையாலும் பல குடும்பங்கள் தமது உணவுத்தேவைக்காக நிர்க்கதியான நிலையில் காணப்படுகின்றன. இவர்களுள் பெரும்பாலானவர்கள் போரினால் பிள்ளைகளை இழந்தவர்களும், காணாமல் போனவர்களது பெற்றோர்களும் அடங்குவர். கிளிநொச்சி மாவட்டத்தில் இவர்களைப்போல பல குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்ய முடியாது பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
இவர்களுக்கு அரசாங்கத்தினாலும் போதியளவு நிவாரணம் அளிக்க முடியவில்லை. இந்த நிலையை நிவர்த்தி செய்யும்பொருட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புக்களின் அனுசரணையுடன் மேற்குறிப்பிட்ட வறியநிலை குடும்பங்களின் நலன்சார்ந்த அமைப்புகளும் இணைந்து ஜனவரி மாதத்திலிருந்து இனங்காணப்பட்ட குடும்பங்களுக்கு உணவுக்கான உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago