2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சிவரூபன் கம்சாயினி நினைவாக உதவிகள் வழங்கி வைப்பு

Niroshini   / 2021 மே 09 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முள்ளிவாய்க்கால் போரின் போது 09.05.2009அன்று உயிரிழந்த சிவரூபன் கம்சாயினி என்ற சிறுமியின் 12ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் உதவி வழங்கும் நிகழ்வும் முள்ளியவளையில் நடைபெற்றது.

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினரின் உதவியில், ந.பார்த்தீபன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் உயிரிழந்த சிறுமியின் 12ஆம் ஆண்டு நினைவிற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் முள்ளியவளை கலைமகள் வித்தியாலய பாடசாலை முதல்வர் சி.மோகனதாஸ் மற்றும் உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் உதவியினை பெறுபவர்கள் என பலர் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தினர்.

சிறுமியின் நினைவாக, வறுமைகோட்டின் கீழ் கல்விகற்று வரும் சிறுவன் ஒருவருனுக்கு கற்றல் செயற்பாட்டிற்காக மிதிவண்டி ஒன்றும் வறுமை கோட்டின் கீழ் நலிவுற்ற குடும்பம் ஒன்றுக்கு உலர் உணவு பொதிகளும் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X