2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

’சிவில் குழுக்கள் செயலிழந்து உள்ளன’

Editorial   / 2020 பெப்ரவரி 07 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் சிவில் குழுக்கள் செயலிழந்து இருப்பதன் காரணமாகவே சட்டவிரோதச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் உள்ள தொடர்பாடல் மற்றும் நம்பிக்கையீனங்கள் காரணமாகவே சட்டவிரோதச் செயற்பாடுகள் அதிகரிப்பதற்கான காரணங்களாக அமைந்து இருக்கின்றது. நடைபெற்று முடிந்த மாவட்ட, பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இவ்விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டால் அத்தகவல் சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்குச் சென்றடைவதாகவும் இதன் காரணமாகவே, சட்டவிரோதச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் தொடர்ச்சியாக பொலிஸார் மீது குற்றச் சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர்பாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பிரதி பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்கள் பலப்படுத்தப்பட்டு பொலிசாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் பலமான உறவைக் கட்டி வளர்ப்பதன் மூலம் சட்டவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த முடியுமென, பொது அமைப்புகள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .