Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 டிசெம்பர் 20 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
“கிளிநொச்சி, முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பாரிய நிதி மோசடி இடம்பெற்று வருவதாக” சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தரான அகிலன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் உள்ள தனியார் விடுதியில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கிளிநொச்சி முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் 50 கோடிக்கு மேல் ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளது.
ஒவ்வொரு சிவில் பாதுகாப்பு திணைக்களத்திலும் பண்ணைகளில் பணிபுரியும் உத்தியோகத்தர்களிடமும் இருந்து வருமான பணம் என தெரிவித்து 3 ஆயிரம் ரூபாய் பணம் தொடர்ச்சியாக பெறப்படுகின்றது. அவற்றில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளது. இதற்கான முழு ஆதாரமும் எம்மிடம் உள்ளது. இவ்விடயம் தொடர்பில் பல்வேறு தரப்பிடமும் கொண்டு சென்றும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என்பதாலேயே ஊடகங்களின் ஊடாக இதனை வெளிப்படுத்துகின்றோம். பண்ணைகளில் பணிபுரியும் நபர்களிடமிருந்து 3 ஆயிரம் ரூபாய் பணம் பெறப்படுவதுக்கு முறையாக பற்று சீட்டுகள் வழங்கப்படுவதில்லை. இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி நேரடியாக கண்காணித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். இங்கு பணிபுரிபவர்கள் அங்கவீனர்களாகவும், முன்னால் போராளிகளாகவும் உள்ள நிலையில் இவ்வாறான மோசடி இடம்பெற்று வருவதாக” அவர் தெரிவித்தார்.
17 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago