2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சுகாதார திணைக்கள சாரதிகள் சுகவீன விடுப்பு போராட்டம்

Niroshini   / 2020 ஒக்டோபர் 08 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட், க. அகரன்

வடமாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் மாகாணம் தழுவிய ரீதியில், சுகவீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம் நாளையும் (09) முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதார சேவைக்குள் கடைமையாற்றி வரும் சாரதிகளை, சுகாதாரதுறைகள் தவிர்ந்த வேறு திணைக்களங்களுக்கு இடமாற்றம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே, குறித்த சுகவீனவிடுப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மன்னார் மாவட்ட சுகாதார திணைக்கள சாரதிகள், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்னாலும் வவுனியா மாவட்ட  சுகாதார திணைக்கள சாரதிகள் வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாகவும், போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன்போது, மன்னார் மாவட்ட சுகாதார திணைக்கள சாரதிகள் முன்னெடுத்த போராட்ட பகுதிக்கு வருகை தந்த மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதனிடம், மகஜரொன்று கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X