2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

சுகாதார நடைமுறைகளை மீறிய இரண்டு உணவகங்களுக்கு சிக்கல்

Niroshini   / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

 

கொரோனா வைரஸ் சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில், கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள இரண்டு சைவ உணவகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி நகரில், கடந்த வெள்ளிக்கிழமையன்று (23), கரைச்சி பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, இரண்டு சைவ உணவகங்கள் கொரோனா சுகாதார
நடைமுறைகளைப் பின்பற்றாது, வியாபார நடவடிக்கைகளில் ஈடுப்பட்டமை கண்டுபிடிக்க்பபட்டது.

இதையடுத்து, சுகாதார பரிசோதகர்களால், இது தொடர்பில் உணவக உரிமையாளர்களுக்கு  அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதும், குறித்த உணவக உரிமையாளர்கள்  அவ்வறிவுறுத்தல்களை உதாசீனம் செய்ததோடு, அதிகாரிகளின் கடமைகளுக்கும் இடையூறு ஏற்படுத்தினர்.

இதன் காரணமாக, கரைச்சி பிரதேச சுகாதார பிரிவினரால் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஓர் உணவகத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், உணவகத்தைப் பூட்டி, சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப சீரமைத்தப் பின்னர் பொதுச்
சுகாதார பரிசோதகர்களின் அறிக்கையைச் சமர்பித்து திறக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அத்துடன், மற்றைய உணவகத்துக்கு, 16 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .